உள்ளூர் செய்திகள்

எக்ஸ்டிராஸ்

* பின்லாந்தில் நடக்கும் ஆர்டிக் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் தருண் 21–16, 21–14 என, டென்மார்க்கின் மாக்னஸ் ஜோஹனேசனை வீழ்த்தினார். இந்திய வீரர் பிரனாய் 10–21, 9–21 என, டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்செனிடம் தோல்வியடைந்தார். * இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் வரும் அக். 10ல் துவங்குகிறது. மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான 163 போட்டிகளை, ‘யூ டியூப்’ சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என, ஐ.எஸ்.எல்., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. * ஐதராபாத்தில், வரும் அக். 8–18ல் வில்வித்தை பிரிமியர் லீக் (ஏ.பி.எல்.,) 2வது சீசன் நடக்கவுள்ளது. இதில், ஒலிம்பிக் சாம்பியன்களான துருக்கியின் மெடே கசோஸ், மெக்சிகோவின் அலெசான்ட்ரா வாலென்சியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். * ஆமதாபாத்தில், இந்திய பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர் கூட்டமைப்பு சார்பில் காமன்வெல்த் ‘கியூ ஸ்போர்ட்ஸ்’ சாம்பியன்ஷிப் 2வது சீசன் நேற்று துவங்கிறது. இதில் 42 நாடுகளை சேர்ந்த 144 பேர் (72 வீரர், 72 வீராங்கனை) பங்கேற்கின்றனர். மொத்தம் 10 பதக்கம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை