எக்ஸ்டிராஸ்
* தென் கொரியாவில் இன்று துவங்கவுள்ள கொரிய ஓபன் ‘சூப்பர் 500’ பாட்மின்டன் தொடரில் இருந்து இந்திய வீரர் லக்சயா சென் விலகினார். இந்தியா சார்பில் பிரனாய், தான்வி சர்மா, மாளவிகா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். * செக்குடியரசில் நடக்கும் சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 3–0 (11–7, 12–10, 11–1) என, பிரான்சின் ஆகஸ்டி துசூர்டை வீழ்த்தினார். * சூரத்தில், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான தேசிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் (‘டி–20’) 10வது சீசன் நடந்தது. பைனலில் ஜம்மு காஷ்மீர் அணி, ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. * ஆமதாபாத்தில், வரும் நவ. 30ல் பிரைம் வாலிபால் லீக் 5வது சீசன் துவங்குகிறது. ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு, சென்னை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. * லக்னோவில் நடந்த சீனியர் பெண்கள் ‘டி–20’ டிராபி தொடருக்கான லீக் போட்டியில் தமிழக அணி (130/7), ஒரு ரன் வித்தியாசத்தில் விதர்பா அணியிடம் (131/4) அதிர்ச்சி தோல்வியடைந்தது. தமிழக அணிக்கு ஹேமலதா (37), கமலினி (34) ஆறுதல் தந்தனர்.