எக்ஸ்டிராஸ்
நியூசிலாந்து செல்லவுள்ள இந்திய ஹாக்கி அணி, 3 போட்டிகள் (நவ. 19, 21, 22, ஆக்லாந்து) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப் பட்டது. கேப்டனாக சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். தவிர இந்த அணியில் கார்த்தி செல்வம், உத்தம் சிங், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சையது முஷ்தாக் அலி டிராபி கிரிக்கெட் (‘டி–20’) தொடருக்கான (நவ. 14 – டிச. 6) மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஷிவம் துபே, சர்பராஸ் கான், சாம்ஸ் முலானி, துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாகூர், முஷீர் கான் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்தின் லின்கன் நகரில், இந்தியா ‘ஏ’, நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் மோதும் அதிகாரப் பூர்வமற்ற 3வது டெஸ்ட் நடக்கிறது. இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 464/5 (‘டிக்ளேர்’) ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 36/2 ரன் எடுத்திருந்தது. நேற்றைய 3ம் நாள் ஆட்டம் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஐதராபாத்தில், வரும் டிச. 11–22ல் ‘கேலோ இந்தியா’ யூத் விளையாட்டு 8வது சீசன் நடக்கவுள்ளது. இதில் தடகளம், பாட்மின்டன், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட 27 வகையான விளையாட்டு இடம் பெற்றுள்ளன. இம்முறை பாய்மரப்படகு போட்டி, காட்சிப்போட்டியாக நடத்தப்படுகிறது.