உள்ளூர் செய்திகள்

எக்ஸ்டிராஸ்

* நியூசிலாந்து சென்ற இந்திய கால்பந்து அணி, 2 சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி 0–5 என தோற்றது. நேற்று, கிறைஸ்ட்ர்ச்சில் நடந்த 2வது போட்டியில் மீண்டும் ஏமாற்றிய இந்தியா 0–3 என தோல்வியடைந்தது. * பெண்கள் கிரிக்கெட் லீக் 5வது சீசனுக்கான முதற்கட்ட போட்டிகள் வதோதராவில் உள்ள பரோடா கிரிக்கெட் சங்க மைதானத்தில் (2027, ஜன. 14–24) நடக்கவுள்ளன. இரண்டாம் கட்ட போட்டிகள் மும்பை, பிரபோர்ன் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது மும்பை, வான்கடே மைதானத்தில் (2027, ஜன. 26–பிப். 7) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. * சிக்கிம் மாநிலத்தில் ஜூனியர் (19 வயது) தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான பைனலில், திக் ஷா, அனன்யா, அஞ்சனா அடங்கிய தமிழக அணி 2–0 என, டில்லியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. ஆண்களுக்கான பைனலில் கர்நாடகா அணி 2–0 என, அசாமை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை