எக்ஸ்டிராஸ்
* உலக பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீராங்கனை சிந்து, 5வது இடத்துக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரீகாந்த் முறையே 11, 30வது இடத்துக்கு முன்னேறினர். * பிரிமியர் லீக் கிரிக்கெட் 20வது சீசனுக்கான வீரர்கள் ‘மினி’ ஏலம் வரும் டிச. 16ல் கோவாவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் 10 அணிகள் சார்பில், 55 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 184 பேர் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்டனர். குஜராத் அணி அதிகபட்சமாக 22 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. லக்னோ அணி, அதிகபட்சமாக ரூ. 47.45 கோடிக்கு வீரர்களை ஒப்பந்தம் செய்ய உள்ளது. * பெங்களூருவில், வரும் டிச. 17–20ல் வேர்ல்டு டென்னிஸ் லீக் 5வது சீசன் நடக்கவுள்ளது. இதில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து), கரோலினா பிலிஸ்கோவா (செக்குடியரசு), நிக் கிரியாஸ் (ஆஸ்திரேலியா) உள்ளிட்ட 16 முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். * இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 13வது சீசனுக்கான 2ம் கட்ட லீக் சுற்று போட்டிகள், அடுத்த ஆண்டு ஜன. 22 முதல் ஏப். 18 வரை நடக்கவுள்ளன. அதன்பின் ‘பிளே–ஆப்’ சுற்று (ஏப். 24 – மே 3), பைனல் (மே 8) நடத்தப்படும்.