மேலும் செய்திகள்
ஆசிய மல்யுத்தம்: ஹர்தீப் 'தங்கம்'
24-Jun-2025
பதுமி: சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் ஜார்ஜியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக கோப்பை ஜூனியர் ('கேடட்') தொடர் நடந்தது. 10 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் சர்பர்தோ மானி, ஓய்ஷிக் மோதினர். இதில் 'டை பிரேக்கரில்' அசத்திய சர்பர்தோ, தங்கப்பதக்கம் வென்றார். ஓய்ஷிக் வெள்ளி, ஆர்த்தி கபில் வெண்கலம் என இப்பிரிவில் மூன்று பதக்கமும் இந்தியாவுக்கு கிடைத்தது.பெண்கள் பிரிவு (10 வயது) பைனலில் இந்தியாவின் திவி பிஜேஷ், சீனாவின் ஜிஹான் செனை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ஷர்வானிகா (தமிழகம்), ரஷ்யாவின் வோல்கோவாவை வென்றார். பெண்கள் பிரிவு (12 வயது) பைனலில் இந்தியாவின் பிரதிதீ, சக வீராங்கனை ஆத்யாவை வீழ்த்தினார். பிரதிதீ தங்கம், ஆத்யா வெள்ளி வென்றனர். இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் கைப்பற்றியது.
24-Jun-2025