உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / என்ன கொடுமை சார் இது...

என்ன கொடுமை சார் இது...

லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 40, காதல் வாழ்க்கை சுவாரஸ்யமானது. இவருக்கு 2010ல் மகன் ஜூனியர் கிறிஸ்டியானோ பிறந்தார். தாயார் விபரத்தை வெளியிடவில்லை. வாடகை தாய் மூலம் இரு குழந்தைகள் (ஆண், பெண்) உள்ளனர். 2016ல் ஜார்ஜினா ரோட்ரிக்சை 31, காதலித்தார். இவருக்கு பிறந்த இரு மகள் சேர்த்து, ரொனால்டோவுக்கு திருமணமாகாமல் 5 குழந்தைகள் உள்ளனர். 9 ஆண்டு காதலுக்கு பிறகு ஜார்ஜினாவை விரைவில் கரம் பிடிக்க உள்ளார். திருமண நிச்சயதார்த்த பரிசாக ஜார்ஜினாவுக்கு விலை உயர்ந்த வைர மோதிரத்தை (ரூ. 17-42 கோடி) ரொனால்டோ அளித்துள்ளார். செலஸ் சோகம் தீருமாபுளோரிடா: டென்னிஸ் அரங்கில் அமெரிக்காவின் மோனிகா செலசை 51, மறக்க முடியாது. 1993ல் ஜெர்மனியின் ஹார்பர்க்கில் நடந்த போட்டியின் போது ஸ்டெபி கிராப் ரசிகர் ஒருவர் செலசின் முதுகில் கத்தியால் குத்தினார். இந்த அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட இவருக்கு சாப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது 'மயாஸ்தினியா கிராவிஸ்' எனும் நோயால் அவதிப்படுகிறார். நரம்பு, தசைகளில் பாதிப்பு, பார்வை குறைபாடு, சோர்வு ஏற்படும். செலஸ் கூறுகையில்,''யுகோஸ்லோவியாவில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்தேன். கத்தி குத்து சம்பவத்தை தொடர்ந்து புதிய வகை நோய் தாக்கியுள்ளது. சாதாரணமாக டென்னிஸ் விளையாடினால் கூட, என் கண்களுக்கு இரு பந்துகள் தெரிகின்றன. பந்து 'பவுன்ஸ்' ஆகும் போது அதற்கு ஏற்ப 'அட்ஜெஸ்ட்' செய்து விளையாட வேண்டும். இது போல பிரச்னைகளையும் 'அட்ஜெஸ்ட்' செய்து வாழ வேண்டும்,''என்றார்.மனித உரிமை காப்போம்அட்லான்டா: கத்தாரில் 2022ல் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடருக்கான மைதான கட்டுமான பணிகளில் ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடும் வெயிலில், ஒரு நாளில் 18 மணி நேரம் வேலை பார்த்தனர். அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால், பலர் மரணம் அடைந்தனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால், மனித உரிமை மீறல் ஏற்பட்டதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) மீது புகார் தெரிவித்தனர். வரும் 2026ல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ இணைந்து நடத்த உள்ள உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகளை 'பிபா' தீவிரமாக கண்காணித்து வருகிறது. தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை