உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / காலிறுதியில் ஸ்பெயின் அணி

காலிறுதியில் ஸ்பெயின் அணி

ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் நடந்த பெண்கள் 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் அணி, பெல்ஜியத்தை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. போர்ச்சுகல்-இத்தாலி மோதிய மற்றொரு லீக் போட்டி 1-1 'டிரா' ஆனது. 18 ஆண்டு கனவுரொசாரியோ: அர்ஜென்டினா அணிக்கு 2022ல் உலக கோப்பை வென்று தந்த ஏஞ்சல் டி மரியா 37, தனது இளமை காலத்தில் விளையாடிய உள்ளூர் ரொசாரியோ சென்ட்ரல் கால்பந்து கிளப் அணியில் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ''நான் விரும்பிய அணியில் 18 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்க இருப்பது 'ஸ்பெஷல்' உணர்வை தருகிறது,''என்றார்.மகனுக்காக...மெக்சிகோ: முன்னாள் குத்துச்சண்டை உலக சாம்பியனான மெக்சிகோவின் ஜூலியோ சீசர் சவேஸ் கூறுகையில்,'' விசா காலம் முடிந்து அமெரிக்காவில் தங்கியதால் எனது மகனும் குத்துச்சண்டை வீரருமான சவேஸ் ஜூனியரை லாஸ் ஏஞ்சலசில் கைது செய்துள்ளனர். அவர் அப்பாவி. அவரை விடுவிக்கும் முயற்சியில் எனது வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர்,''என்றார்.'ஆட்டோகிராப்' லண்டன்: டென்னிஸ் அரங்கில் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் செர்பியாவின் ஜோகோவிச். தற்பேதைய விம்பிள்டன் தொடரில் பங்கேற்கிறார். இவரது மகன் ஸ்டீபன் 11, ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார். ஜோகோவிச் கூறுகையில்,''எனது மகனுக்கு டென்னிஸ் பிடிக்கும். என்னை தவிர விம்பிள்டனில் விளையாடும் மற்ற வீரர்களிடம் 'ஆட்டோகிராப்' வாங்கியுள்ளான். இதை ஏற்றுக் கொள்ள வேண்டிய பரிதாப நிலையில் உள்ளேன்,''என்றார்.எக்ஸ்டிராஸ்இந்தியா, இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் நான்காவது 'டி-20' போட்டி இன்று மான்செஸ்டரில் (இங்கிலாந்து) நடக்கிறது. 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ள இந்தியா, இன்று வென்றால் தொடரை கைப்பற்றலாம். * 'பிடே' கிராண்ட் சுவிஸ் செஸ் உஸ்பெகிஸ்தானில் வரும் செப்டம்பர் 3-16ல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள இந்தியாவின் அர்ஜுன், உலக சாம்பியன் குகேஷிற்கு 'டாப்-2' வீரர்கள் அந்தஸ்து தரப்பட்டுள்ளது. * ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் பங்கேற்கும் மும்பை அணிக்கு உதவி பயிற்சியாளராக ரகானே, பவுலிங் பயிற்சியாளராக குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளனர்.* தமிழக வீரர் சாய் கிஷோர், வரும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் (இங்கிலாந்து) சர்ரே அணிக்காக இரண்டு போட்டியில் விளையாட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி