உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பிரான்ஸ் வீரர் சாதனை: உலக நீச்சல் போட்டியில்

பிரான்ஸ் வீரர் சாதனை: உலக நீச்சல் போட்டியில்

சிங்கப்பூர் சிட்டி: உலக நீச்சல் போட்டிக்கான 200 மீ., தனிநபர் 'மெட்லே' பிரிவில் பிரான்சின் லியோன் மார்ச்சந்த் சாதனை படைத்தார்.சிங்கப்பூரில், உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 200 மீ., தனிநபர் 'மெட்லே' பிரிவு அரையிறுதியில் இலக்கை ஒரு நிமிடம், 52.61 வினாடியில் கடந்த பிரான்சின் லியோன் மார்ச்சந்த், முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். தவிர இவர், பந்தய துாரத்தை அதிவேகமாக கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன், 2011ல் அமெரிக்காவின் ரியான் லோச்டே (ஒரு நிமிடம், 54.00 வினாடி) சாதனை படைத்திருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) அசத்திய மார்ச்சந்த், 4 தங்கம் வென்றிருந்தார்.ஷோன் கங்குலி '38': ஆண்களுக்கான 200 மீ., தனிநபர் 'மெட்லே' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஷோன் கங்குலி 20, பங்கேற்றார். கர்நாடகாவை சேர்ந்த இவர், இலக்கை 2 நிமிடம், 05.40 வினாடியில் கடந்தார். ஒட்டுமொத்தமாக 38வது இடம் பிடித்த இவர், அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை