உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஜூனியர் கோல்ப்: ரிதிமா 2வது இடம்

ஜூனியர் கோல்ப்: ரிதிமா 2வது இடம்

லின்கோவ்: தைவானில் ஜூனியர் ஓபன் கோல்ப் தொடர் நடந்தது. 13 நாடுகளில் இருந்து பங்கேற்றனர். இந்தியா சார்பில் 10 வயது ரிதிமா கபூர் களமிறங்கினார். இந்தியன் கோல்ப் யூனியன் தெற்கு மண்டல அளவில் 2022, 2023, 2024 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தரவரிசையில் 'நம்பர்-1' ஆக உள்ளார் ரிதிமா. இவர், பெண்களுக்கான 'டி' பிரிவில் பங்கேற்றார். மூன்று நாள் நடந்த இப்போட்டியில் மொத்தம் 222 ஸ்டிரோக் (75, 75, 72) எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார். சீனாவின் ஷிமான் ஜு முதலிடம் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ