உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹம்பர்க் ஸ்குவாஷ்: ஜோஷ்னா தோல்வி

ஹம்பர்க் ஸ்குவாஷ்: ஜோஷ்னா தோல்வி

ஹம்பர்க்: ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் 2வது சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா, அபே சிங், ரமித் டான்டன் தோல்வியடைந்தனர்.ஜெர்மனியில், ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 2வது சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, நியூசிலாந்தின் ஜோயல் கிங் மோதினர். இதில் ஏமாற்றிய ஜோஷ்னா 1-3 (9-11, 7-11, 11-9, 4-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.ஆண்களுக்கான 2வது சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, ஜெர்மனியின் ரபேல் காந்த்ரா மோதினர். இதில் வீர் சோட்ரானி 3-0 (11-8, 11-7, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் அபே சிங் 1-3 (9-11, 11-7, 4-11, 2-11) என, இங்கிலாந்தின் சாம் டாட்டிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் ரமித் டான்டன் 1-3 (10-12, 11-4, 5-11, 9-11) என, ஹங்கேரியின் பாலாஸ் பர்காசிடம் வீழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை