உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பெராரி அணியில் ஹாமில்டன்: பார்முலா-1 கார்பந்தயத்தில்

பெராரி அணியில் ஹாமில்டன்: பார்முலா-1 கார்பந்தயத்தில்

லுசைல்: அடுத்த சீசனுக்கான 'பார்முலா-1' கார்பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டன் 'பெராரி' அணி சார்பில் பங்கேற்க உள்ளார்.பிரிட்டன் 'பார்முலா-1' கார்பந்தய வீரர் லீவிஸ் ஹாமில்டன் 39. கடந்த 2007ல் 'மெக்லரான்-மெர்சிடஸ்' அணியில் இணைந்த ஹாமில்டன், 2013 முதல் 'மெர்சிடஸ்' அணிக்காக பங்கேற்று வருகிறார். ஏழு முறை (2008, 2014, 2015, 2017-2020) உலக சாம்பியன் பட்டம் வென்றார். இதில் 6 முறை 'மெர்சிடஸ்' அணி சார்பில் விளையாடினார்.சமீபத்தில், நடப்பு சீசனுடன் 'மெர்சிடஸ்' அணியில் இருந்து விலகப்போவதாக ஹாமில்டன் தெரிவித்தார். அபுதாபியில், டிச. 8ல் நடக்கவுள்ள போட்டி, 'மெர்சிடஸ்' அணிக்காக ஹாமில்டன் பங்கேற்கும் கடைசி கார்பந்தயமாகும். இவர், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 'பார்முலா-1' கார்பந்தயத்தில் 'பெராரி' அணிக்காக களமிறங்க உள்ளார்.ஹாமில்டன் கூறுகையில், ''மெர்சிடஸ் அணிக்காக விளையாடியதை என்றும் மறக்க முடியாது. இந்த அணியுடன் கடந்த 12 ஆண்டு கால பயணம் அற்புதமானது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி