உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாக்கி: இந்தியா அபாரம் வீழ்ந்தது நியூசி.,

ஹாக்கி: இந்தியா அபாரம் வீழ்ந்தது நியூசி.,

ஆக்லாந்து: இந்தியா, நியூசிலாந்து இடையிலான ‘100 ஆண்டு விளையாட்டு உறவு’ கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, நியூசிலாந்து சென்றுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மூன்று போட்டி கொண்ட நட்பு தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று ஆக்லாந்தில் நடந்தது. போட்டியின் 25 வது நிமிடம் நியூசிலாந்தின் ஜான்டி எல்மெஸ் ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் கோல் அடித்தார். அதே வேகத்தில் இந்திய அணியும் பதிலடி தந்தது. உத்தம் சிங் (25) ‘பீல்டு’ கோல் அடிக்க ஸ்கோர் 1–1 என ஆனது. அடுத்து ஷர்தானந்த் (38) கோல் அடித்தார். 43 வது நிமிடம் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை, கேப்டன் சஞ்சய் (43) கோலாக மாற்றினார். இந்திய அணி 3–1 என முன்னிலை பெற்றது. மறுபக்கம் நியூசிலாந்து அணியினர் போராடினர். போட்டியின் 55வது நிமிடத்தில் சாம் ஹிகா ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !