உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாக்கி: இந்தியா இரண்டாவது வெற்றி

ஹாக்கி: இந்தியா இரண்டாவது வெற்றி

ஹுலுன்பியுர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி, ஜப்பானை 5-1 என வீழ்த்தியது.சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியா உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. கோல் மழை: இரண்டாவது லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. கடந்த போட்டியில் சீனாவை வென்ற உற்சாகத்தில் இந்தியா களமிறங்கியது. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே சுக்ஜீத் சிங் மின்னல் வேகத்தில் 'பீல்டு' கோல் அடித்தார். அடுத்து அபிஷேக் (3வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு 'பெனால்டி கார்னர்' மூலம் சஞ்சய் (17) கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் 3-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. பந்து பெரும்பாலும் நமது வீரர்கள் வசம் தான் இருந்தது. ஜப்பானின் கசுமாசா (41) ஆறுதல் கோல் அடித்தார். பின் ஜர்மன்பிரீத் சிங் 'பாஸ்' செய்த பந்தை பெற்ற உத்தம் சிங் (54), அணியின் நான்காவது கோல் அடித்தார். கடைசி கட்டத்தில் சுக்ஜீத் சிங் (60) இன்னொரு கோல் அடித்தார். இந்திய அணி 5-1 என்ற கணக்கில், தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. சிறந்த ஆட்டம்: ஆட்டநாயகன் அபிஷேக் கூறுகையில்,''ஹாக்கியின் அடிப்படை அம்சங்களை பின்பற்றி, தரமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி,''என்றார்.பாக்., அணி 'டிரா'மற்றொரு போட்டியில் சீனா, மலேசியாவை 4-2 என வீழ்த்தியது. பாகிஸ்தான், தென் கொரியா இடையிலான போட்டி 2-2 என 'டிரா' ஆனது. புள்ளிப்பட்டியலில் இந்தியா (2 போட்டி, 2 வெற்றி, 6 புள்ளி) முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் சீனா (3 புள்ளி), தென் கொரியா (2), பாகிஸ்தான் (2), மலேசியா (1), ஜப்பான் (1) உள்ளன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி