உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஆசிய ஹாக்கி: அசத்துமா இந்தியா

ஆசிய ஹாக்கி: அசத்துமா இந்தியா

ராஜ்கிர்: பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் இன்று துவங்குகிறது. நடப்பு சாம்பியன் இந்திய பெண்கள் அணி கோப்பை வெல்லக் காத்திருக்கிறது.ஆசிய பெண்கள் ஹாக்கி அணிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 7வது சீசன் இன்று பீஹாரில் துவங்குகிறது. இந்தியா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து என 6 அணிகள் மோதுகின்றன.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (நவ. 19) முன்னேறும். பைனல் நவ. 20ல் நடக்கும்.இத்தொடரில் இரு முறை (2016ல் சிங்கப்பூர், 2023ல் ராஞ்சி) கோப்பை வென்ற அணி நடப்பு சாம்பியன் இந்தியா. ஆனால் புரோ லீக் தொடரில் பங்கேற்ற 16 போட்டியில் இந்தியா 13ல் தோற்றது. 2ல் மட்டும் வென்று, 1ல் 'டிரா' செய்தது. தவிர பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் பங்கேற்க தகுதிபெற முடியவில்லை. இம்முறை அனுபவம், இளமை கலந்து களமிறங்கும் இந்திய அணி, சொந்தமண்ணில் மீண்டும் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கேப்டன் சலிமா, துணைக் கேப்டன் நவ்னீத் கவுர் களமிறங்குகின்றனர். இன்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொள்கிறது. அடுத்து தென் கொரியா (நாளை), தாய்லாந்து (நவ. 14), சீனா (நவ. 16), ஜப்பானுடன் (நவ. 17) மோத காத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ