உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாட்ரிக் கோப்பை வெல்லுமா இந்தியா * ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியில்...

ஹாட்ரிக் கோப்பை வெல்லுமா இந்தியா * ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியில்...

மஸ்கட்: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இன்று இந்திய அணி, தாய்லாந்தை எதிர்கொள்கிறது.ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 1988 முதல் ஜூனியர் அணிகளுக்கான (21 வயதுக்குட்பட்ட) ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த 9 தொடரில் இந்தியா அதிகபட்சம் 4 முறை (2004, 2008, 2015, 2023) கோப்பை வென்றது. 10 வது தொடர் ஓமனில் நடக்கிறது. நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட 10 அணிகள் மோதுகின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டி நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் தாய்லாந்தை சந்திக்கிறது. அடுத்து ஜப்பான் (நாளை), சீன தைபே (நவ. 30), தென் கொரியா (டிச. 1) அணிகளுடன் விளையாடுகிறது. ஓய்வு பெற்ற கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பயிற்சியாளராக உள்ளார். கேப்டன் ஆமிர் அலி, துணைக் கேப்டன் ரோகித், முன்கள வீரர் குர்ஜோத் சிங் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இத்தொடரில் சாதிக்கும் பட்சத்தில் 2015, 2023, 2024 என 'ஹாட்ரிக்' கோப்பை வெல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ