உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியா-சீனா பலப்பரீட்சை * ஆசிய ஹாக்கியில் புதிய அட்டவணை

இந்தியா-சீனா பலப்பரீட்சை * ஆசிய ஹாக்கியில் புதிய அட்டவணை

புதுடில்லி: இந்தியாவில், ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 29ல் பீஹாரின் ராஜ்கிர் நகரில் துவங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு தகுதி பெறும். இதில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் செப். 7ல் நடக்கும் பைனலில் பலப்பரீட்சை நடத்தும். ஆசிய கோப்பை வெல்லும் அணி, அடுத்த ஆண்டு பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் (2026, ஆக. 14-30) பங்கேற்க தகுதி பெறும். மூன்று முறை சாம்பியன் ஆன இந்திய அணி, 'ஏ' பிரிவில் சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. 'பி' பிரிவில் மலேசியா, இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற தென் கொரியா (5), சீன தைபே, வங்கதேச அணிகள் உள்ளன. ஆக. 29ல் இந்திய அணி தனது முதல் போட்டியில் சீனாவை சந்திக்க உள்ளது. அடுத்து ஜப்பான் (ஆக. 30), கஜகஸ்தான் (செப். 1) அணிகளுடன் மோத உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ