உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாக்கி: இந்தியா-ஜெர்மனி மோதல்

ஹாக்கி: இந்தியா-ஜெர்மனி மோதல்

புதுடில்லி: இந்தியா, ஜெர்மனி ஹாக்கி அணிகள் மோதும் இரு போட்டி கொண்ட தொடரில் மோதவுள்ளன.இந்தியா வரவுள்ள ஜெர்மனி ஹாக்கி அணி, இரு போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. டில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் இப்போட்டி வரும் அக். 23, 24ல் நடக்கவுள்ளன. கடைசியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா, ஜெர்மனி அணிகள் அரையிறுதியில் மோதின. இதில் இந்திய அணி 2-3 என தோற்றது. பின் ஸ்பெயினை வென்று இந்தியா வெண்கலம் கைப்பற்றியது. பைனலில் நெதர்லாந்திடம் வீழ்ந்த ஜெர்மனி, வெள்ளி வென்றது. இந்திய தொடர் குறித்து ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கே கூறுகையில்,''இந்தியா, ஜெர்மனி என இரு அணிகளும் ஹாக்கியில் பல சாதனை படைத்துள்ளன. தற்போது இரு அணிகள் மோதும் இருதரப்பு தொடர் என்பது, உலகத்தரம் வாய்ந்த போட்டியை வெளிப்படுத்துவதாக அமையும். உலகின் மிக வலிமையான அணிகளுக்கு இடையிலான போட்டியை காண, ரசிகர்களுக்கு வாய்ப்பாக இது அமையும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ