மேலும் செய்திகள்
ஹாக்கி: இந்தியா கோல் மழை
1 hour(s) ago
பைனலில் ஷீத்தல் தேவி: உலக பாரா வில்வித்தையில்
07-Sep-2026
தங்கம் வென்றார் பவானி தேவி: ஐஸ்லாந்து வாள் சண்டையில்
07-Sep-2026 | 1
சுஜீத் கலக்கல்: ரஷ்ய மல்யுத்தத்தில்...
07-Sep-2026 | 1
மொகி: ஆசிய கோப்பை ஹாக்கியில் இளம் இந்திய பெண்கள் அணி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. சீனாவின் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி (21 வயது) 10வது சீசன் நடக்கிறது. பெணகள் பிரிவில் மொத்தம் 10 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்தியா, சீனா உட்பட 5 அணிகள் 'எலைட்' பிரிவில் உள்ளன. இந்திய அணி நேற்று தனது மூன்றாவது போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டது. 5வது நிமிடத்தில் கிருஷ்ண சர்மா முதல் கோல் அடித்தார். அடுத்து சுப்ரியா (9வது), பூர்ணிமா (14) கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா (3-0) முந்தியது. இரண்டாவது பாதியில் கீதா (41, 45) இரண்டு கோல் அடித்தார். சனிகா (50) அசத்தினார். முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே தனது முதல் இரண்டு போட்டியில் தென் கொரியா, மலேசியாவை சாய்த்த இந்தியா, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. தவிர, பங்கேற்ற 3 போட்டியிலும் வென்று, புள்ளிப் பட்டியலில் இந்தியா (9) முதலிடத்துக்கு முன்னேறியது.ஆண்கள் கலக்கல்ஆண்கள் பிரிவில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் தலா ஒரு வெற்றி, 'டிரா' செய்தது. நேற்று தனது மூன்றாவது போட்டியில் தென் கொரியாவை சந்தித்தது. போட்டியில் இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடித்தனர். ஒரு கட்டத்தில் ஸ்கோர் 3-3 என சமனில் இருந்தது. இதன் பின் பிரப்தீப் (42), குர்சேவக் (55), ஆர்யன் (58) தங்கள் பங்கிற்கு கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 7-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் இந்தியா (3ல் 2 வெற்றி, 1 'டிரா', 7) முதலிடத்துக்கு முன்னேறியது.
1 hour(s) ago
07-Sep-2026
07-Sep-2026 | 1
07-Sep-2026 | 1