உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாக்கி: இந்தியாவின் இரட்டை இலக்கு * துணை கேப்டன் ஹர்திக் உறுதி

ஹாக்கி: இந்தியாவின் இரட்டை இலக்கு * துணை கேப்டன் ஹர்திக் உறுதி

புதுடில்லி: ''புரோ லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, உலக கோப்பைக்கு தகுதி பெறுவதே இலக்கு,''என ஹர்திக் சிங் தெரிவித்தார்.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோ லீக் தொடர் நடக்கிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16), இந்தியா (15) 'டாப்--3' இடத்தில் உள்ளன.அடுத்து இந்திய அணி, ஐரோப்பியா சென்று புரோ லீக் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில் நெதர்லாந்து மண்ணில் நெதர்லாந்து (ஜூன் 7, 9), அர்ஜென்டினா (ஜூன் 11, 12) அணிகளுடன் விளையாட உள்ளது. பின் பெல்ஜியம் சென்று ஆஸ்திரேலியா (ஜூன் 14, 15), பெல்ஜியம் (21, 22) அணிகளை எதிர்கொள்கிறது. உலக கோப்பை வாய்ப்புபுரோ லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, வரும் 2026ல் நடக்க உள்ள உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதில் 16 அணிகள் மோதும். தற்போதைய நிலையில் தொடரை நடத்தும் நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து, கடந்த ஆண்டு புரோ ஹாக்கி சாம்பியன் ஆஸ்திரேலியா தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள இடங்களை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை தற்போதைய ஐரோப்பிய பயணத்தில் சிறப்பாக செயல்பட்டால், 'உலக' வாய்ப்பை பெறலாம். கடின பயிற்சிஇது பற்றி இந்திய துணை கேப்டன் ஹர்திக் சிங் கூறியது:புரோ ஹாக்கி தொடருக்காக பெங்களூரு சிறப்பு முகாமில் 3 வாரம் கடின பயிற்சி மேற்கொண்டோம். ஐரோப்பிய பயணத்தில் திட்டமிட்டு செயல்பட்டு அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு புள்ளியும் முக்கியம். புரோ ஹாக்கி தொடரில் சாம்பியன், உலக கோப்பைக்கு தகுதி என்ற இரட்டை இலக்கை எட்ட இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற அணிகள் சவால் கொடுக்கும். அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டிகள் முக்கியமானவை. இதில் சாதித்து உலக கோப்பைக்கு முன்னதாகவே தகுதி பெற வேண்டும். அப்போது தான் உலக கோப்பை போட்டிக்கு தயாராக கூடுதல் கால அவகாசம் கிடைக்கும். இந்தியாவுக்கு சாதகம்ஐரோப்பிய பயணத்தில், போட்டிகளுக்கு இடையில் போதிய இடைவெளி இல்லை. நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் என பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது. உலக கோப்பை தொடர் நடக்க உள்ள பெல்ஜியம், நெதர்லாந்து மைதானங்களில் புரோ ஹாக்கி போட்டியும் நடப்பது சாதகம். இங்குள்ள சூழ்நிலையை அறிந்து கொள்ள உதவும். உலக கோப்பைக்கான ஒத்திகையாக ஐரோப்பிய புரோ ஹாக்கி போட்டிகளை கருதுகிறோம்.இவ்வாறு ஹர்திக் சிங் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ