உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியா-சீனா டிரா: உலக ஹாக்கியில் விறுவிறு

இந்தியா-சீனா டிரா: உலக ஹாக்கியில் விறுவிறு

ஆம்ஸ்டல்வீன்: இந்தியா, சீனா பெண்கள் அணிகள் மோதிய உலக கோப்பை ஹாக்கி லீக் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.பெல்ஜியம், நெதர்லாந்தில், பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் நடக்கிறது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின.ஆட்டத்தின் 8வது நிமிடத்தில், சகவீராங்கனை நேஹா 'பாஸ்' செய்த பந்தில் இந்தியாவின் நவ்னீத் கவுர் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 15வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில் சீனாவின் ஜாங் யிங் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். பின், 25வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் இந்தியாவின் தீபிகா ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியின் 39வது நிமிடத்தில் எழுச்சி கண்ட சீனாவின் மா நிங், 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் ஒரு கோல் அடித்தார். முடிவில் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.மற்றொரு 'டி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணிக்கு டார்சி போர்ன், டெஸ்சா ஹோவர்டு, எலிசபெத் நியால், சோபி ஹாமில்டன் தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.ஆஸி., அசத்தல்: பெல்ஜியத்தில் நடந்த ஆண்களுக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 3-1 என வெற்றி பெற்றது. 'பி' பிரிவு லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 3-2 என, பிரான்ஸ் அணியை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை