உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சாதிப்பாரா நீரஜ் சோப்ரா * கிளாசிக் ஈட்டி எறிதலில்...

சாதிப்பாரா நீரஜ் சோப்ரா * கிளாசிக் ஈட்டி எறிதலில்...

பெங்களூரு: இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 27. ஒலிம்பிக்கில் இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்றவர். தற்போது இந்தியாவில் ஈட்டி எறிதல் போட்டியை வளர்க்கும் வகையில் சர்வதேச நட்சத்திரங்கள் பங்கேற்கும் 'நீரஜ் சோப்ரா கிளாசிக்' போட்டியை நடத்துகிறார். பெங்களூரு, கன்டீவ்ரா மைதானத்தில் கடந்த மே 24ல் நடக்க இருந்த இப்போட்டி, போர் பதட்டம் காரணமாக இன்றைக்கு நடக்க உள்ளது. இதில் நீரஜ் சோப்ராவுடன், சக இந்திய வீரர்கள் சச்சின் யாதவ், ரோகித் யாதவ், சாஹில் சில்வல், யாஷ்விர் சிங் களமிறங்குகின்றனர். ரியோ ஒலிம்பிக்கில் (2016) தங்கம் வென்ற ஜெர்மனியின் தாமஸ் ரோலர் (93.90 மீ.,), 2015ல் உலச சாம்பியன் கென்யாவின் ஜூலியஸ் யேகோ (92.72 மீ.,), அமெரிக்காவின் கர்டிஸ் தாம்ப்சன் (87.76 மீ.,), இலங்கையின் ருமேஷ் பதிராகே (85.45 மீ.,), பிரேசிலின் லுாயிஸ் மவுரிசியோ டா சில்வா (86.34 மீ.,) உட்பட 7 அன்னிய வீரர்கள் பங்கேற்கின்றனர். தோகா போட்டியில் 90.23 மீ., துாரம் எறிந்த நீரஜ் சோப்ரா, சொந்தமண்ணில் சிறப்பாக செயல்பட்டு, பட்டம் வெல்ல முயற்சிக்கலாம். 12 வீரர்கள்இன்றைய போட்டியில் இந்தியா (5), சர்வதேசம் (7) என மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 5 வீரர்கள் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி (குறைந்த பட்சம் 85.50 மீ.,) பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை