உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்திய ஜோடி ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்

இந்திய ஜோடி ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்

தோகா: உலக டேபிள் டென்னிஸ் 3வது சுற்றில் இந்தியாவின் யாஷஸ்வினி, தியா ஜோடி தோல்வியடைந்தது.கத்தார் தலைநகர் தோகாவில், உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் யாஷஸ்வினி, தியா ஜோடி, ஜப்பானின் மிவா ஹரிமோடோ, மியூ கிஹாரா ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஏமாற்றிய இந்திய ஜோடி 0-3 (7-11, 8-11, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தது.இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. உலக சாம்பியன்ஷிப் அரங்கில் தொடர்ந்து 2வது முறையாக இந்திய நட்சத்திரங்கள் காலிறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ