உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்திய அணி அசத்தல் வெற்றி: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியில்

இந்திய அணி அசத்தல் வெற்றி: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியில்

இபோ: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.மலேசியாவின் இபோ நகரில், சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி 31வது சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, மலேசியா, பெல்ஜியம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் இந்தியாவின் அமித் ரோஹிதாஸ் ஒரு கோல் அடித்தார். பின், 32வது நிமிடத்தில் இந்தியாவின் சஞ்சய் 'பெனால்டி கார்னர்' மூலம் ஒரு கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற்றுத்தந்தார். இதற்கு, நியூசிலாந்து அணியின் ஜார்ஜ் பேக்கர் 2 கோல் (42, 48வது நிமிடம்) பதிலடி கொடுத்தார்.ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் தமிழகத்தின் செல்வம் கார்த்தி ஒரு 'பீல்டு' கோல் அடிக்க, இந்திய அணி 3-2 என வெற்றி பெற்றது.மற்ற போட்டிகளில் கனடா அணி 3-2 என, தென் கொரியாவை வீழ்த்தியது. பெல்ஜியம் அணி 9-1 என மலேசியாவை வென்றது.நான்கு போட்டிகளின் முடிவில் 3 வெற்றி, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் பெல்ஜியம் (10 புள்ளி, 4 வெற்றி, ஒரு 'டிரா') உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !