ஜூனியர் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்
ரோசாரியோ: ஜூனியர் ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 1-3 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் சிலியிடம் தோல்வியடைந்தது.அர்ஜென்டினாவில், நான்கு நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் நடக்கிறது. இந்தியா, அர்ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா, 4வது போட்டியில் சிலியை மீண்டும் சந்தித்தது.ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்திய அணிக்கு சுக்வீர் கவுர் (35வது நிமிடம்), கனிகா சிவாச் (47வது) தலா ஒரு கோல் அடித்தனர். சிலி சார்பில் ஜெசிந்தா சோலாரி (27வது நிமிடம்), லாரா முல்லர் (42வது) தலா ஒரு கோல் அடித்தனர்.போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் இந்தியா 1-3 என தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு சோனம் மட்டும் கோல் அடித்தார்.