ஜூனியர் ஹாக்கி: தமிழகம் வெற்றி
ஜலந்தர்: ஜூனியர் தேசிய ஹாக்கி லீக் போட்டியில் தமிழக அணி, குஜராத்தை வீழ்த்தியது.பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 14வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் தமிழகம், குஜராத் அணிகள் மோதின. கோல் மழை பொழிந்த தமிழக அணி 10-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழகம் சார்பில் ஆனந்த் 'ஹாட்ரிக்' கோல் (5, 27, 45வது நிமிடம்) அடித்தார். சீனிவாசன் 2 (39, 60வது நிமிடம்), விஷால் (18வது), நந்த குமார் (30வது), நித்ய பிரகாஷ் (34வது), அருண் (53வது), ராகேஷ் (57வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.மற்றொரு லீக் போட்டியில் நிதின் 'ஹாட்ரிக்' கோல் அடிக்க ஹரியானா அணி 14-0 என, ஜம்மு காஷ்மீர் அணியை வென்றது. ஒடிசா அணி 13-0 என அசாமை வீழ்த்தியது. கர்நாடகா அணி 6-1 என ஆந்திராவை தோற்கடித்தது. டில்லி அணி 4-3 என கேரளாவை வீழ்த்தியது.