உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மணிகா, ஸ்ரீஜா வெற்றி: உலக டேபிள் டென்னிசில்

மணிகா, ஸ்ரீஜா வெற்றி: உலக டேபிள் டென்னிசில்

மக்காவ்: உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரை இந்தியாவின் மணிகா, ஸ்ரீஜா வெற்றியுடன் துவக்கினர்.சீனாவில், உலக கோப்பை டேபிள் டென்னிஸ் (ஒற்றையர்) தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மட்டும் பங்கேற்கின்றனர். பெண்கள் ஒற்றையர் 'குரூப்-16' முதல் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, பிரான்சின் கிரெட் மேலிஸ் மோதினர். அபாரமாக ஆடிய மணிகா 4-0 (11-1, 11-2, 11-6, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.'குரூப்-9' முதல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, ஆஸ்திரேலியாவின் கான்ஸ்டான்டினா சைஹோகியோஸ் மோதினர். இதில் அசத்திய ஸ்ரீஜா 3-1 (11-9, 11-4, 11-8, 6-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ