மனுஷ்-தியா ஜோடி சாம்பியன்: கன்டெண்டர் டேபிள் டென்னிசில்
டுனிஸ்: 'கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.டுனிசியாவில், டபிள்யு.டி.டி., 'கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட்டாலே ஜோடி, ஜப்பானின் சோரா மட்சுஷிமா, மிவா ஹரிமோடோ ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 3-2 (11-9, 5-11, 14-12, 3-11, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. டபிள்யு.டி.டி., 'கன்டெண்டர்' கலப்பு இரட்டையரில் பட்டம் வென்ற 2வது இந்திய ஜோடியானது. ஏற்கனவே மணிகா பத்ரா, சத்யன் ஞானசேகரன் ஜோடி (2021) கோப்பை வென்றிருந்தது.ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தாக்கர் ஜோடி, 2-3 (11-8, 7-11, 11-8, 9-11, 10-12) என்ற கணக்கில் ஜெர்மனியின் பெனடிக்ட் டுடா, ஆன்ட்ரி பெர்டெல்ஸ்மியர் ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.