மேலும் செய்திகள்
'ஐ-லீக்' கால்பந்து: பெங்களூரு வெற்றி
26-Feb-2025
பஞ்ச்குலா: தேசிய ஹாக்கி லீக் போட்டியில் தெலுங்கானா, ஜார்க்கண்ட், பெங்கால் அணிகள் வெற்றி பெற்றன.ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில், பெண்களுக்கான சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 15வது சீசன் நடக்கிறது. இதன் 'டிவிஷன்-பி'க்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தெலுங்கானா, பீஹார் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய தெலுங்கானா அணி 5-2 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றி பெற்றது. தெலுங்கானா அணிக்கு கோமல் குர்ஜார் (12, 50, 55வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோல் அடித்து கைகொடுத்தார். பூஜா (13வது நிமிடம்), சுமி (43வது) தலா ஒரு கோல் அடித்தனர். தெலுங்கானா அணி 3 போட்டியில், 2 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.'டிவிஷன்-ஏ'க்கான 'டி' பிரிவு லீக் போட்டியில் பெங்கால், மத்திய பிரதேசம் அணிகள் மோதின. இதில் பெங்கால் அணி 2-1 என வெற்றி பெற்றது. 'சி' பிரிவு லீக் போட்டியில் ஜார்க்கண்ட், மிசோரம் அணிகள் மோதின. இதில் ஜார்க்கண்ட் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் அணிக்கு சஞ்சனா ஹோரோ (21வது நிமிடம்), கேப்டன் அல்பெரா ராணி (36வது), நிராலி குஜுர் (48வது) தலா ஒரு கோல் அடித் கைகொடுத்தனர்.
26-Feb-2025