உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தங்கம் வென்றார் நீரு தண்டா: தேசிய துப்பாக்கி சுடுதலில்

தங்கம் வென்றார் நீரு தண்டா: தேசிய துப்பாக்கி சுடுதலில்

புதுடில்லி: தேசிய துப்பாக்கி சுடுதல் 'டிராப்' பிரிவில், ம.பி., வீராங்கனை நீரு தண்டா தங்கம் வென்றார்.டில்லியில், தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 'டிராப்' பிரிவு தகுதிச் சுற்றில் மத்திய பிரதேசத்தின் பிரகதி துபே (117), நீரு தண்டா (114) முதலிரண்டு இடம் பிடித்தனர். அடுத்த 3 இடங்களை பஞ்சாப்பின் ராஜேஷ்வரி குமாரி (113), டில்லியின் ஆத்யா (112), பிரீத்தி (111), கீர்த்தி குப்தா (111) கைப்பற்றினர்.அடுத்து நடந்த பைனலில் அசத்திய நீரு தண்டா, 41 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். இவர், சமீபத்தில் கஜகஸ்தானின் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார். டில்லியின் கீர்த்தி குப்தா (40), ம.பி.,யின் பிரகதி துபே (32) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். அடுத்த 3 இடங்களை ஆத்யா (27), பிரீத்தி (21), ராஜேஷ்வரி (17) பிடித்தனர்.பெண்கள் அணிகளுக்கான 'டிராப்' பிரிவில் பிரகதி துபே, நீரு தண்டா, மணிஷா கீர் அடங்கிய மத்திய பிரதேச அணி, 339 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. வெள்ளி, வெண்கலப்பதக்கத்தை முறையே டில்லி, பஞ்சாப் அணிகள் தட்டிச் சென்றன.ஜூனியர் பெண்கள் அணிகளுக்கான 'டிராப்' பிரிவில் டில்லி (323 புள்ளி), தமிழகம் (295), ராஜஸ்தான் (274) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி