உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உஷூ: இந்தியாவுக்கு 15 பதக்கம்

உஷூ: இந்தியாவுக்கு 15 பதக்கம்

ஸ்டாக்ஹோம்: நார்டிக் ஓபன் உஷூ சாம்பியன்ஷிப்பில் இந்தியா 8 தங்கம் உட்பட 15 பதக்கம் கைப்பற்றியது.சுவீடனின் ஸ்டாக்ஹோமில் 7வது நார்டிக் ஓபன் உஷூ சாம்பியன்ஷிப் நடந்தது. இந்தியாவின் மெர்சி நகய்மாங், மெபங் லாம்கு என இருவரும் தலா 2 பிரிவுகளில் தங்கப்பதக்கம் கைப்பற்றினர். தவிர ரஷித் சைப், குசும், ஒனிலு டெகா, கோமல் தங்கள் பிரிவுகளில் தங்கம் கைப்பற்றி அசத்தினார். 65 கிலோ பிரிவில் சுஜ்ஜால் வெண்கலப் பதக்கம் வென்றார். தவிர இந்தியாவுக்கு 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. ஒட்டு மொத்தமாக இந்தியா 15 பதக்கம் வசப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !