உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியாவில் ஒலிம்பிக் வாய்ப்பு

இந்தியாவில் ஒலிம்பிக் வாய்ப்பு

புதுடில்லி: டில்லி வந்துள்ள உலக தடகள கூட்டமைப்பின் தலைவர் செபாஸ்டியன் கோ, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது பற்றி விவாதித்தனர்.மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,''வரும் 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் இந்தியா உறுதியாக இருப்பதாக செபாஸ்டியன் கோவிடம் மாண்டவியா தெரிவித்தார். ஒலிம்பிக் நடத்துவதற்கு அரசு, தொழில்துறையினரின் ஆதரவு உள்ளது. இந்தியாவின் பாரம்பரியம், விளையாட்டு திறனை உலகிற்கு உணர்த்த தயாராக உள்ளோம்,'என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய தடகள கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''இந்தியாவில் வரும் 2028ல் ஜூனியர் உலக தடகள சாம்பியன்ஷிப் நடத்த விரும்புகிறோம். இது பற்றி செபாஸ்டியன் கோவிடம் விவாதித்தோம்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !