உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பைனலில் அவினாஷ் சபில் * ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் சாதனை

பைனலில் அவினாஷ் சபில் * ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் சாதனை

பாரிஸ்: ஒலிம்பிக் 'ஸ்டீபிள் சேஸ்' ஓட்டத்தில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் ஆனார் அவினாஷ் சபில்.பாரிஸ் ஒலிம்பிக் தடகளத்தில் நேற்று ஆண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள் சேஸ்' ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் அவினாஷ் சபில் பங்கேற்கிறார். தகுதிச்சுற்று 2ல் ஓடிய களமிறங்கினார் அவினாஷ். 'டாப்-5' இடம் பிடித்தால் பைனலில் பங்கேற்க தகுதி பெறலாம் என்ற நிலையில், முதல் இரு சுற்றில் முன்னணியில் வந்தார். பின், அடுத்தடுத்த சுற்றில் சற்று மெதுவாக ஓடினார். முடிவில் 8 நிமிடம், 15.43 வினாடி நேரத்தில் வந்து 5வது இடம் பிடித்து, பைனலுக்குள் நுழைந்தார்.இதைடுத்து 'ஸ்டீபிள் சேஸ்' ஓட்டத்தில் பைனலுக்கு (ஆக. 8, இரவு 1:13 மணி) முன்னேறிய முதல் இந்திய வீரர் என சாதனை படைத்தார் அவினாஷ் சபில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை