உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தங்கம் வெல்வாரா ஷீத்தல் தேவி * நாளை பாராலிம்பிக் துவக்கம்

தங்கம் வெல்வாரா ஷீத்தல் தேவி * நாளை பாராலிம்பிக் துவக்கம்

பாரிஸ்: ''பாரிஸ் பாராலிம்பிக் வில்வித்தையில் தங்கம் வெல்ல முயற்சிப்பேன்,'' என இந்தியாவின் ஷீத்தல் தேவி தெரிவித்துள்ளார்.பிரான்சின் பாரிசில் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பாராலிம்பிக் போட்டி நாளை துவங்குகிறது. உலகின் 4,400 நட்சத்திரங்கள் அசத்த உள்ளனர். இந்தியா சார்பில் 84 பேர் களமிறங்குகின்றனர். பாராலிம்பிக் துவங்கிய 1960ல் முதல் வில்வித்தை இடம் பெற்று வருகிறது. பிரிட்டன், தென் கொரியா, அமெரிக்க அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவின் ஹர்விந்தர் சிங் மட்டும் ஒரு வெண்கலம் (2021 டோக்கியோ) வென்றார்.இம்முறை இந்தியாவின் 17 வயது வீராங்கனை ஷீத்தல் தேவி, நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவர், 'போகோமேலியா' என்ற பிறவி குறைபாடுடன் பிறந்தார். இரு கைகள் இல்லாத நிலையில், 2021ல் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டார். துவக்கத்தில் செயற்கை கை உதவியுடன் விளையாடினார். பின் 2012 லண்டன், பாராலிம்பிக்கில் இரு கைகள் இல்லாமல் வில்வித்தையில் தங்கம் வென்ற மாட் ஸ்டட்ஸ்மானை (அமெரிக்கா) பார்த்து வியந்தார். இவரை போல, கால் உதவியால் அம்புகளை விட்டு, இலக்கைத் துல்லியமாக தாக்கினார். 2023 பாரா உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, பாரா ஆசிய விளையாட்டில் தங்கம், வெள்ளி கைப்பற்றினார். ஷீத்தல் தேவி கூறுகையில்,'' நம் எண்ணப்படி வாழ்க்கை செல்லவில்லை என்றால், கடவுள் சிறப்பாக தரப் போகிறார் என உணர்ந்து கொண்டேன். இந்த நம்பிக்கையுடன் கடினமாக பயிற்சி செய்துள்ளேன். பாரிஸ் பாராலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கிறேன்,'' என்றார்.முதல் வீராங்கனைபாராலிம்பிக் வில்வித்தையில் இரு கைகள் இல்லாமல் பங்கேற்கும் முதல் வீராங்கனை ஆகிறார் ஷீத்தல் தேவி. இதற்கு முன் அமெரிக்க வீரர் மாட் ஸ்டட்மான், இரு கைகள் இல்லாமல், 2012 லண்டன், பாராலிம்பிக்கில் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை