உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பூஜா தேசிய சாதனை: ஜூனியர் தடகள பைனலுக்கு தகுதி

பூஜா தேசிய சாதனை: ஜூனியர் தடகள பைனலுக்கு தகுதி

லிமா: உலக ஜூனியர் தடகளத்தின் உயரம் தாண்டுதலில் தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை பூஜா, பைனலுக்கு முன்னேறினார்.பெருவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் பெண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் பூஜா சிங் 17, பங்கேற்றார். அதிகபட்சமாக 1.83 மீ., தாண்டிய ஹரியானாவை சேர்ந்த பூஜா, 'பி' பிரிவு தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 9வது இடம் பிடித்த இவர், பைனலுக்குள் நுழைந்தார்.கட்டிட தொழிலாயின் (கொத்தனார்) மகளான பூஜா, தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். கடந்த ஆண்டு தென் கொரியாவில் நடந்த ஆசிய ஜூனியர் (20 வயது) தடகள சாம்பியன்ஷிப் பைனலில் 1.82 மீ., தாண்டிய இவர், தேசிய சாதனையுடன் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.ஜெய் குமார் '6'ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் பைனலில் இந்தியாவின் ஜெய் குமார் பங்கேற்றார். மொத்தம் 8 பேர் பங்கேற்ற பைனலில், இலக்கை 46.99 வினாடியில் அடைந்த ஜெய் குமார், 6வது இடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ