மேலும் செய்திகள்
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் தோல்வி
31-Aug-2025
கபடி: பாட்னா 'திரில்' வெற்றி
20-Sep-2025
சென்னை: சென்னையில் புரோ கபடி லீக் போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் தமிழ் தலைவாஸ் அணி எழுச்சி கண்டால், 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறலாம்.இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' ஹரியானா, தமிழ் தலைவாஸ், மும்பை, பெங்கால் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 108 போட்டிகள், விசாகப்பட்டனம், ஜெய்ப்பூர், சென்னை, டில்லி என 4 நகரங்களில் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 18 போட்டியில் விளையாடும். லீக் சுற்றின் முடிவில் 'டாப்-8' இடம் பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.விசாகப்பட்டனம், ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டிகளின் முடிவில் டில்லி (14 புள்ளி), புனே (12), ஹரியானா (12), தெலுங்கு டைட்டன்ஸ் (10), பெங்களூரு (10), உ.பி., (8), தமிழ் தலைவாஸ் (8) அணிகள் 'டாப்-8' இடத்தில் உள்ளன.இன்று முதல் வரும் அக். 10 வரை சென்னையில் லீக் போட்டிகள் நடக்கவுள்ளன. சொந்த மண்ணில் 4 போட்டிகளில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணி எழுச்சி பெறும் பட்சத்தில் 'டாப்-8' இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் (94 புள்ளி), நிதேஷ் குமார் (33), நரேந்தர் (25) உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்லது.
31-Aug-2025
20-Sep-2025