மேலும் செய்திகள்
கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்
22-Nov-2024
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்
29-Nov-2024
மீண்டும் முதல் இடம் பிடித்த Bumrah
28-Nov-2024
புனே: புரோ கபடி லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி 27-34 என ஜெய்ப்பூரிடம் தோல்வியடைந்தது.இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. புனேயில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் அணிகள் மோதின. தமிழ் தலைவாஸ் அணியினரை 'ஆல்-அவுட்' செய்த ஜெய்ப்பூர் அணி, முதல் பாதி முடிவில் 20-13 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணியினர் எழுச்சி கண்ட போதும் 14 புள்ளி மட்டுமே கிடைத்தது. ஜெய்ப்பூர் அணி 13 புள்ளி பெற்றது. ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 27-34 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.தமிழ் தலைவாஸ் சார்பில் ஹிமான்ஷு, கேப்டன் நிதேஷ் குமார் தலா 7 புள்ளி பெற்றனர். ஜெய்ப்பூர் அணிக்கு கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் (6 புள்ளி), நீரஜ் நார்வல் (6), அன்குஷ் ராதே (5), சுர்ஜீத் சிங் (4) கைகொடுத்தனர். இதுவரை 18 போட்டியில், 6 வெற்றி, ஒரு 'டை', 11 தோல்வி என 39 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி 10வது இடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் அணி 54 புள்ளிகளுடன் (9 வெற்றி, 2 'டை', 7 தோல்வி) 8வது இடத்தில் உள்ளது.
22-Nov-2024
29-Nov-2024
28-Nov-2024