புரோ கபடி: தமிழ் தலைவாஸ் தோல்வி
விசாகப்பட்டனம்: புரோ கபடி லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி, மும்பையிடம் தோல்வியடைந்தது.புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், மும்பை அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 14-11 என முன்னிலையில் இருந்தது.பின் எழுச்சி கண்ட மும்பை அணியினர், தமிழ் தலைவாஸ் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்து முன்னிலை பெற்றனர். கடைசி நிமிடம் வரை போராடிய தமிழ் தலைவாஸ் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மும்பை அணி 36-33 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.தமிழ் தலைவாஸ் அணிக்கு அர்ஜுன் தேஷ்வால் (12 புள்ளி), கேப்டன் பவன் ஷெராவத் (7) கைகொடுத்தனர். மும்பை அணி சார்பில் அஜித் சவுகான் 9, அனில் 8 புள்ளி பெற்றனர். மற்றொரு லீக் போட்டியில் பெங்கால், ஹரியானா அணிகள் மோதின. இதில் பெங்கால் அணி 54-44 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.