உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ரொனால்டோவுக்கு தடை

ரொனால்டோவுக்கு தடை

லிஸ்பன்: போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ, ஒரு மாதம் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 41. உலக கோப்பை தொடருக்குப் பின் புதிய பயிற்சியாளராக ஜார்ஜ் ஜீசஸ் உள்ளார். நார்வேக்கு எதிரான போட்டியில், ரொனால்டோவுக்கு வாய்ப்பு தராமல், பயிற்சியாளர் ஜீசஸ் புறக்கணித்தார். இதுகுறித்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. கோபமடைந்த ரொனால்டோ, போர்ச்சுகல் அணி முகாமை விட்டு வெளியேறினார். இதுகுறித்து போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு விசாரித்தது. முடிவில், ரூ. 27,000 அபராதம் விதித்தது. தவிர, போட்டிகளில் பங்கேற்க ஒரு மாதம் தடை விதித்தது. எனினும் இந்த தடை, தேசிய அணிக்கு மட்டுமா அல்லது கிளப் அணிகளில் பங்கேற்பதையும் பாதிக்குமா என தெளிவாகத் தெரியவில்லை. வரும் நவம்பரில், நேஷனல் லீக் தொடரில் டென்மார்க் மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ரொனால்டோ பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை