உள்ளூர் செய்திகள்

‘ரவுண்ட்–அப்’

பட்லருக்கு ‘ஆப்பரேஷன்’ லண்டன்: இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர் 36. சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இடது தொடைப் பின்பகுதியில் காயம் அடைந்தார். இதையடுத்து இவருக்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டது. இதுகுறித்த போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார். இதில்,‘ ஆப்பரேஷசன் நல்லவிதமாக முடிந்தது. விரைவில் மீண்டு வருவேன். எப்போதும் இல்லாத வகையில் சிறப்பாக உள்ளதாக உணர்கிறேன்,’ என தெரிவித்துள்ளார். மூன்றாவது சுற்றில் மரியா உஹான்: சீனாவில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் கிரீசின் மரியா சக்காரி, உக்ரைனின் மரியா கோஸ்டியுக் மோதினர். முதல் செட்டை 6–4 என வென்ற கோஸ்டியுக், அடுத்த செட்டை 2–6 என இழந்தார். தொடர்ந்து மூன்றாவது செட்டையும் (2–6) நழுவவிட்டார். 2 மணி நேரம், 7 நிமிடம் நடந்த போட்டியில் மரியா சக்காரி 4–6, 6–2, 6–2 என வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை