மேலும் செய்திகள்
சீன ஓபன் டென்னிஸ்: ஆன்ட்ரீவா அசத்தல்
08-Oct-2026
‘ரவுண்டு–16’ சுற்றில் ஸ்வியாடெக் உஹான்: சீனாவில், பெண்களுக்கான உஹான் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் 6–2, 6–1 என, சகவீராங்கனை மக்டாலேனா பிரெச்சை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6–2, 6–7, 3–6 என, லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவிடம் தோல்வியடைந்தார். மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து), அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 0–2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் ஆர்சனல் அணி 3–0 என, பிரான்சின் லில்லி அணியை வீழ்த்தியது. அமெரிக்க அணி ‘டிரா’ செஸ்டர்: அமெரிக்காவில் நடந்த பெண்களுக்கான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அமெரிக்கா, ஸ்பெயின் அணிகள் மோதின. ஒருகட்டத்தில் ஸ்பெயின் அணி 2–1 என முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஸ்வான்சன் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. காலிறுதியில் மெத்வெடேவ் ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ், ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ் மோதினர். இதில் மெத்வெடேவ் 6–4, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
08-Oct-2026