உள்ளூர் செய்திகள்

‘ரவுண்ட்–அப்’

நோஸ்கோவா முன்னேற்றம் இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ‘குரூப்–1’ லீக் போட்டியில் செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா, அமெரிக்காவின் கோகோ காப் மோதினர். அபாரமாக ஆடிய நோஸ்கோவா 6–3, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஏற்கனவே உக்ரைனின் மார்டா கோஸ்டியுக்கை வீழ்த்திய நோஸ்கோவா, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து இம்முறை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் வீராங்கனையானார். மான்செஸ்டர் சிட்டி வெற்றி மோன்சா: பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 26வது சீசன் நடக்கிறது. இத்தாலியில் நடந்த லீக் போட்டியில், இன்டர் மிலன் (இத்தாலி), மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த மான்செஸ்டர் சிட்டி அணி 4–1 என வெற்றி பெற்றது. பிரான்சில் நடந்த போட்டியில், ஜெர்மனியின் பேயர்ன் முனிக் அணி 2–1 என, பிரான்சின் பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணியை வென்றது. புள்ளிப்பட்டியலில் பார்சிலோனா (9 புள்ளி), பேயர்ன் முனிக் (8), செல்சி (8) அணிகள் ‘டாப்–3’ வரிசையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ