உள்ளூர் செய்திகள்

‘ரவுண்ட்–அப்’

செல்சி அணி முதலிடம் லண்டன்: பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து 26வது சீசன் நடக்கிறது. லண்டனில் நடந்த லீக் போட்டியில், செல்சி (இங்கிலாந்து), பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் (பிரான்ஸ்) அணிகள் மோதின. இதில் செல்சி அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த லீக் போட்டியில், ரியல் மாட்ரிட் அணி (ஸ்பெயின்) 3–1 என, இன்டர் மிலன் அணியை (இத்தாலி) வென்றது. சுவீடனில் நடந்த போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி (இங்கிலாந்து) 2–0 என, ஹேக்கன் அணியை (சுவீடன்) வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 5 போட்டியில், 3 வெற்றி, 2 ‘டிரா’ என, 11 புள்ளிகளுடன் செல்சி அணி முதலிடத்துக்கு முன்னேறியது. அல்காரஸ் முன்னேற்றம் டுரின்: இத்தாலியின் டுரின் நகரில், உலகின் ‘டாப்–8’ வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ‘இவான் லெண்டல்’ பிரிவு லீக் போட்டியில், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ் மோதினர். அல்காரஸ் 6–2, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் போட்டியில் அமெரிக்காவின் பிரான்சஸ் டியாபோவை வீழ்த்திய அல்காரஸ், தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ