உள்ளூர் செய்திகள்

’ரவுண்ட்–அப்’

போலார்டு 15,000 ரன் துபாய்: ‘டி–20’ அரங்கில் 15,000 ரன் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் ஆனார் போலார்டு. சர்வதேச லீக் ‘டி–20’ தொடர் துபாயில் நடக்கிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ், டெசர்ட் வைப்பர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு குசல் பெரேரா (58), முகமது வசீம் (41) ஜோடி கைகொடுத்தது. பூரன் 32 ரன் எடுத்தார். கேப்டன் போலார்டு (15) ஒரு ரன் எடுத்த போது, ஒட்டுமொத்த ‘டி–20’ல் 15,000 ரன் என்ற இலக்கை எட்டினார். இவர் 755 போட்டியில் 15,014 ரன் எடுத்துள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் பட்லர் (529ல் 15,062) உள்ளார். மும்பை எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 174/8 ரன் எடுத்தது. டெசர்ட் அணி 19.1 ஓவரில் 122 ரன்னில் ஆல் அவுட்டாகி, 52 ரன்னில் தோற்றது. குரோஷியா, இத்தாலி அபாரம் கத்தார்: ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் (17 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கான) கத்தாரில் நடக்கிறது. மொத்தம் ** அணிகள் அல் ரய்யானில் நடந்த ‘எப்’ பிரிவு போட்டி நடந்தன. இதில் குரோஷிய அணி 4–0 என தஜிகிஸ்தான் அணியை சாய்த்தது. மற்றொரு போட்டியில் செனகல் அணி 9–0 என, கியூபாவை வென்றது. ‘எச்’ பிரிவு லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த ஸ்பெயின் அணி 15–0 என பிஜியை வீழ்த்தியது. மொராக்கோ, சீனா அணிகள் மோதிய மற்றொரு போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ