உள்ளூர் செய்திகள்

‘ரவுண்ட்–அப்’

இத்தாலி--–ஸ்பெயின் மோதல் போலோக்னா: இத்தாலியில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் ‘நாக்–அவுட்’ சுற்று நடக்கிறது. இதன் முதல் அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ இத்தாலி, செக்குடியரசு அணிகள் மோதின. இதில் இத்தாலி அணி 2–1 என வெற்றி பெற்று தொடர்ச்சியாக 4வது முறையாக (2023–26) பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் பிரிட்டன், ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் அல்காரசின் ஸ்பெயின் அணி 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கவுள்ள பைனலில் இத்தாலி, ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இன்டர் மயாமி அதிர்ச்சி கொலம்பஸ்: அமெரிக்கா, கனடாவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 31வது சீசன் நடக்கிறது. ‘பிளே–ஆப்’ முதல் சுற்றில், இன்டர் மயாமி, கொலம்பஸ் அணிகள் மோதின. இதன் முதல் போட்டியில் இன்டர் மயாமி அணி 0–3 என தோற்றது. இரண்டாவது போட்டியில் கொலம்பஸ் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முடிவில் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணி, ஒட்டுமொத்தமாக 0–4 (0–3, 0–1) என தோல்வியடைந்து, ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைக்க தவறியது. நாட்டிங்காம் ‘திரில்’ வெற்றி நாட்டிங்காம்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. நாட்டிங்காமில் நடந்த லீக் போட்டியில், நாட்டிங்காம், செல்சி அணிகள் மோதின. இகோர் ஜீசஸ் (5வது நிமிடம்), கிப்ஸ்–ஒயிட் (51, 72வது) கைகொடுக்க, நாட்டிங்காம் அணி 3–2 என்ற கோல் கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 12 போட்டியில், 3 வெற்றி, 3 ‘டிரா’, 6 தோல்வி என, 12 புள்ளிகளுடன் நாட்டிங்காம் அணி 14வது இடத்துக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !