உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்திய பெண்கள் வெண்கலம் * ஆசிய ரக்பி போட்டியில்...

இந்திய பெண்கள் வெண்கலம் * ஆசிய ரக்பி போட்டியில்...

ராஜ்கிர்: பீஹாரில் ஆசிய ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) தொடர் நடந்தது. இதன் லீக் சுற்றில் இந்திய பெண்கள் அணி 'டி' பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் அசத்திய இந்திய பெண்கள் அணி (7 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறியது. 'சி' பிரிவில் முதலிடம் பெற்ற சீனாவை எதிர்கொண்டது. இதில் 7-28 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.அடுத்து நடந்த போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 12-5 என வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.இந்திய ஆண்கள் அணி லீக் சுற்றில் (3ல் 1 வெற்றி, 2 தோல்வி, 5 புள்ளி) 'ஏ' பிரிவில் 3வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது. 5-6 வது இடத்துக்கான போட்டியில் 19-24 என கஜகஸ்தானிடம் தோற்று, 6வது இடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை