வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லா வீரர்களை சோதிக்க வேண்டும்.
புதுடில்லி: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை அர்ச்சனாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.இந்திய தடகள வீராங்கனை அர்ச்சனா ஜாதவ் 20. பாதி மாரத்தான், 10,000 மீ., ஓட்டத்தில் பங்கேற்பவர். கடைசியாக 2024, அக்டோபரில் டில்லியில் நடந்த பாதி மாரத்தானில் பங்கேற்றார். இவரிடம் 2024 டிசம்பரில் உலக தடகள குழு (ஏ.ஐ.யு.,) சார்பில் ஊக்கமருந்து சோதனை நடந்தது. இதில் தசை நார்களை வலுப்படுத்த உதவும், தடை செய்யப்பட்ட ஆக்சன்டிரோலோன் என்ற மருந்து பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து 2025, ஜனவரி 7 முதல் போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பின் ஏ.ஐ.யு.,க்கு அனுப்பிய பதிலில்,' உங்கள் முடிவை ஏற்றுக் கொள்கிறேன். தவறுக்கு வருந்துகிறேன்,' என தெரிவித்து இருந்தார். அர்ச்சனா தனது தவறை ஏற்றுக் கொண்டதால், மீண்டும் விசாரணை தேவையில்லை என ஏ.ஐ.யு., முடிவு செய்தது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,'' ஊக்கமருந்து விதிகளை தடகள வீராங்கனை அர்ச்சனா, வேண்டும் என்றே மீறியுள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி 7 முதல், நான்கு ஆண்டு தடை விதிக்கப்படுகிறது,' என தெரிவித்துள்ளது. இதனால், கடந்த டிசம்பர் 15 முதல் அர்ச்சனா வென்ற பதக்கங்கள், பரிசுகள் திரும்ப பெறப்படும்.
எல்லா வீரர்களை சோதிக்க வேண்டும்.