உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சீமாவுக்கு 16 மாதம் தடை * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்

சீமாவுக்கு 16 மாதம் தடை * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்

புதுடில்லி: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய வட்டு எறிதல் வீராங்கனை சீமா புனியாவுக்கு 16 மாதம் தடை விதிக்கப்பட்டது.தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் சார்பில், ஊக்கமருந்து பயன்படுத்தி சிக்கியவர்கள் குறித்து, புதிய பட்டியல் வெளியானது. இதில் இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சீமா புனியா 42, சிக்கியுள்ளார். இவருக்கு எப்போது சோதனை நடந்தது, தடை செய்யப்பட்ட மருந்து உட்பட எவ்வித விவரமும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் சீமாவுக்கு, கடந்த நவம்பர் 10 முதல், 18 மாதம் தடை விதிக்கப்பட்டது. ஆசியா 3 (1 தங்கம், 2 வெண்கலம்), காமன்வெல்த் (3 வெள்ளி, 1 வெண்கலம்) விளையாட்டில் 7 பதக்கம் வென்ற சீமா, ஒலிம்பிக்கில் 4 முறை பங்கேற்றுள்ளார். தற்போதைய தடை காரணமாக, அடுத்த ஆண்டு ஆசிய விளையாட்டில் பங்கேற்க முடியாது. ஏற்கனவே 2000 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் இதுபோல சிக்கியதால், தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. பின் 2006, தற்போது 2025 என மூன்றாவது முறையாக இதுபோல சிக்கியுள்ளார்.தவிர பூஜா (தடகளம், 4 ஆண்டு), மன்ஜீத் குமார் (குண்டு எறிதல், 6 ஆண்டு), நிகேஷ் (தடகளம், 4), மாரத்தான் வீரர் குல்தீப் சிங் (4), சவி யாதவிற்கும் (ஸ்டீபிள் சேஸ், 4) தடை விதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை