உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வெண்கலம் வென்றார் இளவேனில் * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்...

வெண்கலம் வென்றார் இளவேனில் * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்...

முனிக்: ஜெர்மனியின் முனிக் நகரில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டி நேற்று துவங்கியது. பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் இளவேனில், 635.9 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார். இது புதிய தேசிய சாதனை ஆனது. இந்தியாவின் மற்ற வீராங்கனைகள் ரமிதா (632.6) 13, அனன்யா (632.4) 15, மேஹனா (631.0) 25 வது இடம் பிடித்து வெளியேறினர்.அடுத்து நடந்த பைனலில் 231.2 புள்ளி எடுத்த இளவேனில், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். சீனாவின் ஜிபெய் வாங் (252.7), தென் கொரியாவின் யூன்ஜி (252.6) தங்கம், வெள்ளி கைப்பற்றினர். ஆண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் ராவத், 582 புள்ளியுடன் 5வது இடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை