உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஒரே நாளில் இந்தியாவுக்கு 19 பதக்கம் * தெற்காசிய ஜூனியர் தடகளத்தில்...

ஒரே நாளில் இந்தியாவுக்கு 19 பதக்கம் * தெற்காசிய ஜூனியர் தடகளத்தில்...

சென்னை: தெற்காசிய ஜூனியர் தடகளத்தின் நேற்று ஒரே நாளில் இந்தியா 9 தங்கம் உட்பட 19 பதக்கம் கைப்பற்றியது. வனிஷா, ரித்திக் (வட்டு எறிதல்), உன்னதி (110 மீ., தடை ஓட்டம்) சாதனை படைத்தனர்.தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், 4வது சீசன் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது. பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் அனிஷா, 49.91 மீ., துாரம் எறிந்து, சாதனையுடன் தங்கம் வென்றார். இந்தியாவின் அம்னத் காம்போஜ் (48.38) வெள்ளி வென்றார்.ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீரர் ரித்திக் (55.64 மீ.,) புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். ராமன் (51.22) வெள்ளி வசப்படுத்தினார்.உன்னதி அபாரம்பெண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில், இந்தியாவின் உன்னதி (13.93 வினாடி) தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 0.03 வினாடி பின்தங்கிய மற்றொரு இந்திய வீராங்கனை சபிதா (13.96) வெள்ளி கைப்பற்றினார். இந்த இரண்டும் புதிய சாதனையாக அமைந்தது.ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் நயன் பிரதீப்(14.14 வினாடி) வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இலங்கையின் சந்துன் கோஷா (14.06), விஷ்வா (14.27) தங்கம், வெண்கலம் வென்றனர்.ஜித்தின் தங்கம்நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஜித்தின் அர்ஜுனன், 7.61 மீ., துாரம் தாண்டி, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். மற்றொரு இந்திய வீரர் முகமது அடா சாஜித் (7.43), வெள்ளி கைப்பற்றினார். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் பிரதிக் ஷா யமுனா (5.79 மீ.,), லக்சன்யா (5.75 மீ.,) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.ஷாருக் அபாரம் 3000 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர்கள் ஷாருக் கான் (8 நிமிடம், 26.06 வினாடி), மோகித் (8:27.61) முறையே தங்கம், வெள்ளி கைப்பற்றினர். பெண்களுக்கான 3000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பிராச்சி (9:57.26), ஷில்பா (10:04.23) முறையே தங்கம், வெள்ளி பெற்றனர். 400 மீ., ஓட்டம் பெண்கள் பிரிவில் இந்தியாவின் நீரு பதக் (54.50 வினாடி), சந்திர மோல் (54.82) தங்கம், வெள்ளி வென்றனர். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஜெய் குமார் (46.86) தங்கம் வசப்படுத்தினார்.நேற்று 10 பிரிவில் போட்டி நடந்தன. இதில் இந்தியா 9ல் தங்கம் வென்றது. 9 வெள்ளி, 1 வெண்கலம் என நேற்று மட்டும் இந்தியா 19 பதக்கம் வசப்படுத்தியது.முதலிடம்தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் இதுவரை இந்தியா 12 தங்கம், 13 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கம் கைப்பற்றியது. இலங்கை 19 பதக்கம் (4 தங்கம், 3 வெள்ளி, 12 வெண்கலம்) வென்றது. நேபாளம் ஒரு வெண்கலம் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை